விவசாய ஊக்குவிப்புத் திட்டமம் – யாழ் மாவட்ட விசாயிகளுக்கான தானிய விதைகளை சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, June 23rd, 2023

கிராமிய மேம்பாட்டிற்கான விவசாய ஊக்குவிப்புத் திட்டத்தின் அடிப்படையில், யாழ் மாவட்ட விசாயிகளுக்கான தானிய விதைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைத்தார்.

குறித்த திட்டத்திற்காகா யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சுமார் 44 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 12 பிரதேச செயலகங்களை சேர்ந்த 646 பயனாளர்களுக்கு பயறு விதைகளும் 294 பயனாளர்களுக்கு உழுந்து விதைகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: