வலி.வடக்கின் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பில கூடுதல் அவதானம் செலுத்தப்படும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, October 19th, 2018

மீள் குடியேற்ற பிரதேசமான வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் அபிவிருத்தியில் அதிக அக்கறை செலுத்தி அங்கு வாழும் மக்களது எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகளை தாம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவல கத்திற்கு வருகை தந்திருந்த வலி வடக்கு பிரதேசத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தமது பிரதேசத்தின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போதே செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுபையில் –

கடும் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் சரி அதன்பின்னரான காலத்திலும் சரி நான் எமது மக்களுடன் இருந்து அவர்களது துன்ப துயரங்களை அறிந்து அவர்களுக்குத் தேவையான  உதவிகளை பெற்றுக்கொடுத்ததுடன் எமது மக்களுக்கு ஒரு ஆறுதலை வழங்கியிருந்தோம்.

அதன்பின்னர் கடந்த ஆட்சி காலத்தில் நான் அமைச்சராக இருந்த போது எமது மக்களின் 17 500 ஏக்கருக்கும் மேலான காணி நிலங்களை மீட்டு கொடுத்து அவர்களை மீளவும் அப்பிரதேசங்களில் வாழ்வதற்கு வழிசமைத்து கொடுத்திருந்தேன்.

ஆனாலும் தற்போது அவ்வாறான பெரும் பணிகளை மேற்கொள்வதற்கான அரசியல் பலம் எம்மிடம் காணப்படாத போதும் நாம் தென்னிலங்கை அரசுகளுடன் கொண்டுள்ள நல்லுறவு காரணமாக பல மக்கள் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். அத்தகைய முயற்சிகளூடாக இன்று நீங்கள் கோரியுள்ள அடிப்படை தேவைகள் சுகாதார பிரச்சினைகள் உள்ளிட்ட தேவைப்பாடுகளை நிறைவு செய்த தர முயற்சிகளை மேற்கொள்ள தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

IMG_20181019_111653 IMG_20181018_162630

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு கிளிநொச்சி நகரில் மகத்தான வரவேற்பு : ஆசிவேண்டி பிள்ளையார் கோவி...
பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்...
மட்டக்களப்பில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதார அச்சுறுத்தல் - அமைச்சர் டக்ளஸிடம் பிரதேச மக...

விகிதாசார அடிப்படையில் முப்படைகள் பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களில் வேலைவாய்ப்பு தேவை - பிரதம...
எம்மால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்...
ஒலுவில் துறைமுகத்தில் மீனுக்கான உணவு மற்றும் மீன் உணவு உற்பத்தித் தொழிற்சாலை – முதலீடு செய்ய தயாராக ...