வட்டுவாகல் கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு – கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Sunday, February 28th, 2021

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் களப்பில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வட்டுவாகல் களப்பை ஆழப்படுத்துவதற்கான நடவடிக்கைய மேற்கொள்வதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் விஜயமாக முல்லைத்தீவு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதி  கடற்றொழிலாளர்களை சந்தித்து அவர்களது பிரலச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டபோது இவ்விடயம் குறித்த அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்தே அமைச்சர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

இதன்போது குறித்தபகுதி கடற்றொழிலாளர்கள் மேலும் குறிப்பிடுகையில் ௲

தற்போது இறால் அறுவடைக்கான பருவகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் வட்டுவாகல் பகுதியில் அதிகளவான மீனவர்கள் தமது வீச்சு வலை தொழிலை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ஆனாலும் இந்த களப்பு ஆளப்படுத்தாத காரணத்தினால் இறால் பிடிபடும் அளவில் பாரிய வீழ்ச்சி காணப்படுவதாகவும் எனவே சம்மந்தப்பட்ட தரப்புக்கள் எமது வாழ்வாதாரத்தில் அக்கறை கொண்டு விரைவில் இதற்கான தீர்வினை வழங்க வேண்டும் என கோரியிருந்தனர்

இந்நிலையிலேயே மூன்று நாள் விஜயமாக முல்லைத்தீவு சென்றிருந்த  கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட்டுவாகல் ஆழமாக்கல் பணி விரைவில் இடம்பெறும் எனவும் குறித்த வட்டுவாகல் களப்பில் இறால் குஞ்சுகள், மீன் குஞ்சுகள் விடுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவில் கடற்றொழில்  மக்களது வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பதற்கான மயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts:

கறுப்பு ஜூலை நிகழ்ந்திருக்கா விட்டால் நாடு பெரும் அபிவிருத்தி அடைந்திருக்கும்- நாடாளு மன்றில் டக்ளஸ்...
வடக்கு - கிழக்கு பட்டதாரிகளுக்கு இன விகிதாசார அடிப்படையில் அரச தொழில்வாய்ப்பு வேண்டும் - பிரதமரிடம் ...
சிலாபம் இறால் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் டீசல் மற்றும் டொலர் பிரச்சினைகளுக்கு விரைவில் மாற்று ஏற...