வடமராட்சி கிழக்கு ஆசிரியர்களின் இடமாற்றம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் இடைநிறுத்தம்!

வடமராட்சி கிழக்கு ஆசிரியர்களின் இடமாற்றம்டடட அமைச்சர் டக்ளஸால் இடைநிறுத்தம்!
இடமாற்றத்தை இரத்துச் செய்து தருமாறு கோரிய வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வகையில் அந்த இடமாற்றங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
முன்பதாக தமது இடமாற்றத்தை இரத்துச் செய்து தருமாறு வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இன்றையதினம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்போது அதி கஷ்டப் பிரதேசமான வடமராட்சி கிழக்கில் 2009 ஆம் ஆண்டு மீளக்குடியமர்த்தப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை தாங்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு முகம்கொடுத்து அப்பகுதி மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்து சிறந்த பொறுபேறுகளை மாணவர்கள் பெற்றுக்கொள்ள பாடுபட்டு வரும் நங்களுக்கு தற்போது வெளிமாவட்டங்களுகு மீள்வும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
நாம் ஏற்கனவே மருதங்கேணி அதிகஷ்ட பிரதேசத்தில் கடமையாற்றும் நிலையில் இது எமக்கு பெரிதும் ஏமற்றத்தையும் மன வேதனையையும் தருகின்றது.
நாம் ஏற்கனவே வடமாகாண கல்வி அமைச்சின் சட்ட கோவைக்கு அமைய அதி கஷ்ட அல்லது வெளிமாவட்டங்களில் பணியாற்றி முடித்தும் கற்பித்க்தலிலும் ஈடுபட்டு வரும் நிலையில் மீண்டும் எமக்கு வெளிமாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அனவே எமது நிலைமையை கருத்தில் கொண்டு தமது இடமாற்றத்தை இரத்து செய்து தருமாறு கோரியதுடன் அவ்வாறு இடமாற்றம் செய்வதானால் தாங்கள்தொடர்ந்தும் தற்போதுள்ள இடங்களிலேயே சேவையை. தொடர்வதற்கோ அல்லது இடமாற்றத்தை யாழ் மாவட்டத்திற்குள்ளோ தமக்கு ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறித்த ஆசிரியர்களது நியாயமான கோரிக்கையை கருத்திற்கொண்ட அமைச்சர் அது தொடர்பில் துறைசார் அதிகரிகளுடன் கலந்துரையாடி ஆசிரியர்களது நியாயமான கோரிக்கைக்கு அமைய இடமாற்றங்களை இடைநிறுத்துமாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.
இந்நிலையில் குறித்த ஆசிரியர்களுக்கு அவர்களின் நியாயமான கோரிக்கைக்கிணங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|