வடக்கு -கிழக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்தது.!

Thursday, December 21st, 2017

யாழ் மாவட்டத்தின் 16 உள்ளூராட்சி மன்றங்களின் வேட்பு மனுக்களை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கனவே சாவகச்சேரி நகரசபைக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் ஏனைய 16 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வகையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று வடக்கு கிழக்கு மாவட்டங்களில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில் வேட்பு மனுக்களை இன்றையதினம் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர்கள் மற்றும் பிரதேச நிர்வாக செயலாளர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், என பலர் கலந்துகொண்ருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்களின் அபிலாஷைகளைக் கருத்தில் கொண்டு கட்சியூடான எமது செயற்றிட்டங்களை முன்னெடுக்கவேண்டும் - டக்ளஸ் ...
யாழ்ப்பாணத்திற்கான புகையிரத கட்டணத்தில் பாரபட்சம் ஏன் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
தமிழ் மக்கள் முன்னால் 3 அரசியல் உள்ளது - தரகு அரசியல், சவப்பெட்டி அரசியல், நடைமுறைச்சாத்தியமான அரசிய...