யாழ் கிளிநொச்சி மாவட்ட வாழ்வாதார அபிவிருத்திக் குழுக் கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பம்!

Wednesday, March 17th, 2021

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” எண்ணக்கருவிற்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட வாழ்வாதார அபிவிருத்திக் குழுவின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான குறித்த கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா,

விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, வடமாகாண ஆளுனர் திருமதி சார்ள்ஸ், யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெறுகின்றது.

குறித்த கூட்டத்தின்போது கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களில் குறித்த துறைசார் அமைச்சுக்களின் கீழ் உள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு அவற்றுக்கான தீர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் அமைச்சுக்களின் செயலாளர்கள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், திணைக்களப் பணிப்பாளர்பள் மற்றும் துறைசார் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

Related posts:

யாழ்ப்பாணம் நெடுந்தூர தனியார் பேருந்து நிலையத்தை திறந்துவைத்து சேவைகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் ...
திருமலை மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றவுள்ள பிரதமருக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு!
மக்கள் வரிசையாக நிற்கின்ற நிலைமையை உடனடியாக மாற்ற வேண்டும்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு: தேசத்தை கட்டியெழுப்ப அபிவிருத்தி - டக்ளஸ் தேவானந்தா
தொல்பொருள் திணைக்களம் வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்துகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்...
21 ஆவது திருத்தச்சட்டத்துக்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி - டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 5 அமைச்சர்களை ...