முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் சகோதரரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Sunday, August 26th, 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வின் சகோதரரான சந்திர ராஜபக்சவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளர்.

மெதமுலனையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் வீட்டிற்கு சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வின் சகோதரரான சந்திர ராஜபக்சவின் பூதவுலுக்கு மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அன்னாரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் அன்னாரின் பிரிவால்  துயருற்றிருக்கும்  உற்றார் உறவினர்களுக்கும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

1 88888 7777  5555

Related posts: