நாம் தேர்தலில் போட்டியிடுவது ஆளவேண்டும் என்ற ஆசையிலல்ல: மக்கள் உரிமையோடு வாழவேண்டும் என்பதற்காகவே – டக்ளஸ் எம். பி!

Wednesday, January 24th, 2018

எமது மக்களின் அபிலாஷைகளை தீர்த்துவைத்து அதனூடாக அவர்களின் வாழ்க்கையை முன்கொண்டு செல்வதற்கு நாம் எமது அரசியல் பயணத்தில் தொடர்ந்தும் பயணிக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தெரிவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஜெயபுரம் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நாங்கள் தேர்தலில் போட்டியிடுவது நாங்கள் ஆளவேண்டும் என்ற ஆசையில் அல்ல,எமது மக்கள் உரிமையோடு வாழவேண்டும் என்பதற்காகவே. அந்தவகையில் எமது மக்களின் எதிர்கால வாழ்வுக்காக கடந்த காலங்களில் நாம் அயராது உழைத்து வந்திருக்கின்றோம். இக்காலப் பகுதியில் எமது கட்சியின் பெயரைப் பயன்படுத்தி பலரும் தமது அரசியல் பிழைப்புக்களை முன்னெடுத்துவந்துள்ளார்கள்.

இந்தப் பகுதியில் வாழும் ஒவ்வொரு மக்களும் மீளக் குடியமர்ந்தபோது நாம் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து அவர்களது மீள் குடியேற்றத்திலும் அவர்களது அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதிலும் மிகுந்த அக்கறையுடன் உழைத்திருக்கின்றோம்.

இங்கு வாழும் மக்கள் தமது பகுதிகளுக்கான வீதிகள் புனரமைப்புச் செய்யப்படாதுள்ளதை எனது கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது உண்மையிலேயே எனக்கு வருத்தமளிக்கின்றது.

ஏனென்றால் கடந்த காலங்களில் இந்தப் பிரதேச சபையை கைப்பற்றியிருந்தவர்கள் கூட இந்தப் பகுதி வீதிகளை புனரமைப்புச் செய்யாது விட்டுள்ளமையானது அவர்களின் இயலாத் தன்மையையே எடுத்தியம்பி நிற்கின்றது.

எனவே இங்குள்ள வீதிகளை புனரமைப்புச் செய்வது மட்டுமன்றி இங்கு மக்களால் கூறப்பட்டுள்ள அத்தனை சேவைகளையும் நாம் முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகாண்பதற்கு மக்களாகிய ஒவ்வொருவரும் தமது கடமைப்பொறுப்புக்களை உணர்ந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதனூடாகவே சாத்தியமாகும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related posts:

அதிகாரத்தை தாருங்கள் : நான் உங்கள் எதிர்காலத்ததை வென்றெடுத்துத் தருவேன் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!...
கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் - மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு!
கடற்றொழில் சங்கங்களின் செயற்பாடுகள் வினைத் திறனாக இருக்க வேண்டும் - யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்...

ஈ.பி.டி.பி. கூறுகின்ற அரசியல் நிலைப்பாட்டையே ஏனைய கட்சிகளும் பின் தொடர்கின்றன - அமைச்சர் டக்ளஸ் தே...
வேலணையில் நூறு நகரத் திட்டத்தின் தேசிய நிகழ்வு - அமைச்சர் டக்ளஸின் பரிந்துரையில் பிரதமர் மஹிந்த ஆரம்...
வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சர் ...