மீளவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படக் கூடாது – டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Tuesday, December 5th, 2017

யாழ் மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படுகின்ற மின்தடை குறித்தும் கௌரவ அமைச்சர் அவர்களது அவதானத்திற்குக் கொண்டு வருகின்றேன். இந்நிலை மேலும் சீர் செய்யப்பட வேண்டியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மின்வலு புதுப்பிக்கத்தக்க சக்தி பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி கடந்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அபிவிருத்தி ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களின் உற்பத்திகள் சொற்ப அளவிலேயே காணக்கூடியதான நிலையில் அதற்கான பல்வேறு திட்டங்களை வடக்கு மாகாணத்திலே மெற்கொள்ள முடியுமெனக் கருதுகின்றேன். குறிப்பாக சூரியக்கள காற்றலை நீரலை கிளிசீரியா போன்றவை மூலமான மின் உற்பத்தி முறைமைகளை மேற்கொள்ள முடியும். அதற்கான வளங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இது குறித்தும் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்துவார் என எதிர்பார்க்கின்றேன்.

அதே நேரம், எமது பகுதிகளில் கடந்த காலங்களில் மின் வசதிகள் வழங்கப்பட்டு, அந்த வாய்ப்புகள் தாமதாகியிருந்த எமது மக்களுக்கு அந்த வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற கௌரவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களுக்கும் பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா அவர்களுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இத்தகைய புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்திகள் குன்றியிருக்கின்ற எமது நாடு இறக்குமதி மூலமான சக்திகளையே நம்பிக் கொண்டிருக்கின்ற நிலையில் காரணங்கள் எதுவாகக் கூறப்பட்டாலும், எரிபொருள் தட்டுப்பாடுகள் மீளவும் ஏற்பட வாய்ப்புகளை வழங்க வேண்டாம் என்ற ஒரு வேண்டுகோளை கௌரவ அமைச்சர் அர்ஜூன ரணதுங்ஹ அவர்களிடம் முன்வைத்துக் கொண்டு, கடற்றொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள் அமைச்சு தொடர்பில் எனது சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

Untitled-11 copy

Related posts:

சுயலாப அரசியலுக்காகவே திலீபன் நினைவுகூரப்படுகின்றார் - பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றார் அமைச்சர் ...
"எமது மக்களின் எதிர்காலம் சிறப்பானதாக உருவாக்கப்பட வேண்டும் என்பதிலேயே முழுமையாக அக்கறை செலுத்த...
பனை சார் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்களும் பிரச்சினைகளும் துறைசார் அமைச்சர் ரமேஸ் பத்திரனவுடன் இணை...