மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை பெற்றுக்கொடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை விடுவிப்பதில் இருந்த தடை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் நீக்கப்பட்டது.
யுத்தகாலத்தில் முழுமையாக அழிக்கப்பட்ட மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயத்தின் புனர் நிர்மாணப் தற்போது விரைவாக நடைபெற்று வருகின்றது.
கரையோர பாதுகாப்புத் தினணக்களத்தின் கடலோர எல்லைக்குள் இவ்வாலயம் அமைந்திருப்பதன் காரணமாக ஆலய நிர்மாணத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் இந்துசமய கலாசாரத் திணைக்களத்தினால் ஒதுக்கப்பட்ட ஐந்து இலட்சம் ரூபா நிதி வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆலய பரிபாலன சபையினரால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதனையடுத்து துறைசார் அதிகாரிளுடன் அமைச்சர் கலந்துரையாடியதன் அடிப்படையில் குறித்த கட்டுமாணப் பணிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆலய நிர்மானப்பணிகளுக்கு அனுமதியில்லாமையினால் கடந்த ஆண்டு நவம்பர் நடுப்பகுதியில் அனைத்து நிர்மானப்பனிகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|