மண்டைதீவில் அமையவுள்ள சுற்றுலா மையத்திற்கான அமைவிடத்தை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

யாழ். மண்டைதீவு பிரதேசத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள சுற்றுலா மையத்திற்கான அமைவிடத்தினையும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஆரம்ப பணிகளையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக பார்த்து சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடினார்.
குறித்த கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றது.
இதேவேளை வேலணை பிரதேச சபைக்கான மண்டை தீவு உப அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முன்னாள் போராளிகளை ஏற்க எமது சமூகம் தயாராக வேண்டும்! டக்ளஸ் தேவானந்தா
மக்களுக்கான உன்னத சேவைகளை வழங்கவே நாம் விரும்புகின்றோம் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !
வடக்கு கிழக்கு கடற்றொழில்சார் அபிவிருத்திக்கு உதவ வேண்டும். - நோர்வேயிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
|
|