மக்களைப் பாதிக்கும் ஒப்பந்தங்களை யாருக்காகவும் ஏற்றுக் கொள்ள முடியாது – நாடாளுமன்றில் அமைச்சர் டகள்ஸ் திட்டவட்டம்!

Thursday, October 8th, 2020

ஒப்பந்தங்கள் என்ற பெயரில் நாட்டையும் மக்களையும் பாதிக்கும் எந்தவிதமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றை ஆதரிக்க முடியாது என்று தெரித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவ்வாறான தீர்மானங்கள் எவற்றையும் மேன்மைதங்கிய ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் எதிர்க்கட்சியினால் இன்று(08.10.2020) கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு ஒப்பந்தங்கள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த கருத்தினை தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“சுமார் 2000ம் ஆண்டு காலமாக தனித்துவமிக்க இறையாண்மை அடையாளத்தைக் கொண்டதான எமது நாடு, அக்காலந்தொட்டே சர்வதேச தொடர்புகளைக் கொண்ட நாடாகவும் திகழ்ந்து வருகின்றது. அந்த வகையில், அன்று முதற்கொண்டு எமது நாட்டின் பெயரில் பல்வேறு துறைகள் சார்ந்தும் பல்வேறு ஒப்பந்தங்களை காலத்திற்கு காலம் ஆட்சி பீடம் ஏறுகின்ற அரசாங்கங்களினால் செய்து கொள்ளப்பட்டுள்ளன.

மேற்கொள்ளக்கூடிய வெளிநாட்டு ஒப்பந்தங்கள் இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் நன்மை கருதியதாக இருக்க வேண்டும் என்பதில் எமக்கு மாற்று கருத்தில்லை.

அதேநேரம், மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வெளிநாட்டு ஒப்பந்தங்களும் அவை எமக்கு பாதகமாகவோ, நட்டத்தை ஏற்படுத்தும் வகையிலோ மாறுகின்றபோது, அவற்றிலிருந்து நாம் வெளியேறுவதற்கு தேவையான ஏற்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும்” என்று சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடமராட்சி கிழக்கில் மக்களது காணிகளை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை!
சுயலாப அரசியல்வாதிகளுக்கு உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்புகள் மகிழ்ச்சியே – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
மாற்று வேலைத் திட்டத்திற்குமான அதிகாரத்தை கோரி உங்கள் முன்னிலையில் வந்திருக்கின்றோம் – திருமலையில் அ...

மக்களின் தேவைகள் இன்னமும் பூரணப்படுத்தப்பட முடியாத நிலைமையே காணப்படுகின்றன - டக்ளஸ் தேவானந்தா!
யாழ் குடாநாட்டின் முக்கிய பொதுச் சந்தைகளின் வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர...
தேச விடியல் நேசர் அமரர் கார்த்திகேசு வேலும்மயிலும் அவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரிய...