மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்திய எழுதாரகை படகை அப்புறப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
Saturday, July 18th, 2020அனலைதீவு இறங்கு துறையில் தரித்து நிறுத்தப்பட்டுள்ள எழுதாரகை படகினை அப்புறப்படுத்துவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்வேறு சரச்சைகளுக்கு மத்தியில் வடக்கு மாகாண சபையினால் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட குறித்த படகு நீண்ட
காலமாக சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில் அனலைதீவு இறங்குதுறையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்ளை எதிர்கொள்வதுடன், சிலருக்கு கால் முறிவு போன்ற காயங்களும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அனலைதீவு பிரதேசத்திற்கு வருகை தந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம், குறித்த படகை அப்புறப்படுத்தி தருமாறு பிரதேச மக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட அமைச்சர் அவர்கள், மக்களுக்கு அசௌகரியத்தினை ஏற்படுத்தும் குறித்த படகினை உடனடியாக அப்புறப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|