மக்களுக்காக எத்தகைய துன்ப துயரங்களையும் எதிர்கொண்டு வெற்றிகொள்ள தயாராகவே இருக்கின்றோம் – தெல்லிப்ப ளையில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 31st, 2018

வலிகாமம் வடக்குப் பகுதியில் இதுவரை மீளக் குடியேறாத மக்கள் மீளவும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி இயல்பு வாழ்வை வாழக்கூடியதான ஒரு சூழ்நிலை தோற்றுவிக்கப்படுவதற்கு நாம் என்றும் அந்த மக்களுக்கு துணையாக இருப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு தெல்லிப்பளையில் பெருந்திரளான மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

மக்களின் நீண்டகால தேவைகள் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகளாக இன்றும் உள்ள நிலையில் அவற்றுக்குரிய தீர்வுகள் காணப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதற்கமைவாகவே நாம் எமது வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக அர்பபணிப்போடு முன்னெடுத்துவருகின்றோம்.

தேர்தல் வெற்றிகளுக்காக சக தமிழ் கட்சிகளும் சில தமிழ் ஊடகங்களும் திட்டமிட்ட வகையில் எம்மீது கழங்கத்தையும் சேறுபூசல்களையும் ஏற்படுத்திவருகின்றன.

ஆனாலும் எமது மக்களுக்காக நாம் எத்தகைய துன்ப துயரங்களை சந்திக்கவும் அவற்றை எதிர்கொண்டு வெற்றிகொள்ளவும் தயாராகவே இருக்கின்றோம்.

எனவே வலிகாமம் வடக்கு மக்களாகிய நீங்கள் மட்டுமல்ல எமது தமிழர் தாயகப் பகுதிகளெங்கும் பரந்துவாழும் மக்கள் அனைவரும் உண்மையிலேயே ஒரு அர்ப்ணிப்போடும் உண்மைத் தனன்மையோடு  சிந்தித்து வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் செயற்பட வேண்டும்.

அதுமட்டுமன்றி நாம் உள்ளூராட்சி சபையை மட்டுமல்லாது வடக்கு மாகாண சபையையும் நாம் வெற்றிகொள்வதற்கு உங்களது ஒத்துழைப்பும் ஆதரவும் முக்கியமானதென்பதை கருத்தில் கொண்டு எமது கட்சியின் சின்னமான வீணைச் சின்னத்தின் வெற்றியை உறுத்திப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது சுன்னாகம் ஐயநார் கோவிலடி, உடுவில் மற்றும் சிந்தன் கேணி ஆகிய பகுதிகளிலும் தேர்தல் பரப்பரைக் கூட்டங்கள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: