பொருத்தமான இடங்களில் மின் உற்பத்திக்கான சூரியகலன் தொகுதிககளை அமைப்பது தொடர்பாக மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அதிகார சபை அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையடல்!

Wednesday, June 8th, 2022

பேலியகொட மீன் சந்தை மற்றும் மீன்பிடித் துறைமுகங்கள் போன்ற பொருத்தமான இடங்களில் மின் உற்பத்திக்கான சூரியகலன் தொகுதிககளை அமைப்பது தொடர்பாக மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அதிகார சபை அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

பொருத்தமான இடங்களை தெரிவு செய்து சூரியகலன் தொகுதிகள் மூலம் மின் உற்பத்திகளை மேற்கொள்வதன் மூலம், நாடு எதிர்கொண்டுள்ள மின்சாரப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதுடன் கடற்றொழில் அமைச்சின் வருமானத்தினையும் அதிகரிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அதிகாரசபையின் தலைவர் உட்பட்ட அதிகாரிகளும், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் உட்பட்ட அமைச்சு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். –

000

Related posts:

பயிரழிவுகளுக்கான நட்டஈடுகள் மற்றும் மானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ...
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட்டு பரிகாரங்கள் பெற்றுக்கொடுக்க விரைவில் நடவட...
பொருளாதார ரீதியான அபிவிருத்தி சகல மட்டங்களுக்கும் பரவ வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் எதிர்பார்ப்பு!