புதிய தொழில் முறைகளை பின்பற்றி அதிக வருமானத்தை ஈட்டுமாறு கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Saturday, July 4th, 2020

கச்சாய் பிரதேசத்தி்ல் ஏற்றுமதிக்கு வாய்ப்பான கொடுவாய்., பாலை போன்ற  மீன்  கூடடைத்தல் முறையினை பயன்படுத்தி வளர்ப்பதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அதற்கு தேவையான முதலீட்டிற்கான ஏற்பாடுகளை மானிய அடிப்படையில் மேற்கொண்டு தருவதாகவும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கச்சாய் பிரதேச கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும், தொழிலாளர்களின் அதிகரிப்பு மற்றும் பல்வேறு காரணங்களினால் தங்களுக்கு போதிய வருமானங்களைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் வாழ்வாதார அச்சுறுத்தல்களை எதிர்காள்வதாகவும் தெரிவித்தனர்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், தேசிய நீர்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடாக ஆய்வுகளை மேற்கொண்டு நீரின் தன்மைக்கு ஏற்ப சாத்தியமான நவீன முறைகளைப் பயன்படுத்தி மீன் மற்றும் இறால் வளர்ப்புக்களில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த பிதேசத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர், கடற்றொழிலாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதனடிப்படையில் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு காண்பதற்கு ஆலோசனைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யுத்தத்தின் எச்சங்களாக வாழும் எமது வாழ்வியலுக்கு விளக்கேற்றித் தாருங்கள் - டக்ளஸ் தேவானந்தாவிடம் முழ...
அநீதிகளை புரிகின்ற குற்றவாளிகளை விடவும் அந்த குற்றவாளிகளை காப்பாற்ற எத்தனிப்போரே அதிக பட்ச தண்டனைக்க...
யுத்தம் முடிவடைந்தாலும் மக்களின் வாழ்கை போராட்டம் இன்னும் முடியவில்லை - மிருசுவில் வடக்கில் அமைச்சர்...