புதிய அண்டில் கடற்றொழிலாளர்களின் நலன்கருதி பல்வேறு திட்டங்கள் – அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, January 3rd, 2024


………

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கடற்றொழிலாளர்களின் நலன்கருதி எட்டாயிரத்து எண்ணூறு மில்லியன் ரூபா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடற்றொழில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக கடற்றொழில் சமூகத்திற்காக தமது அமைச்சினால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதன்பொருட்டு அமைச்சின் புதிய செயலாளர் உள்ளிட்ட ஊழியர்கள் செயற்படுவார்களென எதிர்பார்ப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அமைச்சின் அலுவலகத்தில் 01.01.2024 புத்தாண்டை முன்னிட்டு கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையைற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் தமக்கு பல்வேறு வகையிலும் உறுதுணையாக இருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சனத் நிசாந்த, காஞ்சன விஜேசேகர, டி.வி. சானக ற்றும் தற்போதைய இராஜாங்க அமைச்சரான பியல் நிசாந்த ஆகியோரை இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூர்வதாகவும் அத்துடன் கடந்த நான்கு வருடங்களாக சேவையாற்றி ஓய்வு பெற்றுள்ள அமைச்சின் முன்னாள் செயலாளர் இந்து ரத்நாயக்க தமது அமைச்சின் முன்னேற்றத்திற்காக பாரிய சேவையாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில் அனைத்து ஊழியர்களும் தமது கடமைகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு ஆக்கமும் ஊக்கமும் கிடைப்பதற்கு பிரார்த்திப்பதாகவும் னாதிபைதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் நாட்டை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டங்களுக்கு கடற்றொழில் அமைச்சு என்ற வகையில் அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த, அமைச்சின் புதிய செயலாளர் திருமதி கே.என். குமாரி, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த  மற்றும் கடற்றொழில் அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
0000

Related posts: