பிரமந்தனாறு பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஒரு வாரத்தில் தீர்வு கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தொழிலாளர்கள் நன்றி தெரிவிப்பு!

Friday, July 10th, 2020

பிரமந்தனாறு குளத்தை அண்டிய நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் கோரிக்கைக்கு இணங்க  அவர்களது தொழில் நடவடிக்கையை ஊக்குவிக்கும் முகமாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பணிப்பின் பேரில் ஒரு இலட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

கடந்தவாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதிக்க விஜயம் மேற்கொண்டிருந்தபோது அமைச்சரிடம் குறித்த பகுதி நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கள் தமது வாழ்வாதார பொருளாதாரத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் பிரமந்தனாறு குளத்தில் மீன் குஞ்சுகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அவர்களது நியாயமான கொரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துரிதகதியில் நடவடிக்கைகளை முன்னெடுத்து இன்றையதினம் அக்களத்தில் சுமார் ஒரு இலட்சம் மீன்குஞ்சகள் விடப்பட்டன. இதனையடுத்து அப்பகுதி நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வின்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் வை. தவநாதன் உள்ளிட்ட பல கட்சியின் முக்கியஸ்தர்கள் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்களின் தேவைகளை தீர்ப்பதற்கு முன்னின்று உழையுங்கள் - நிர்வாக செயலாளர்களிடம் செயலாளர் நாயகம் தெரிவிப...
கிடைக்கின்ற வாய்ப்புக்களை மக்களின் நலனுக்காக செயற்படுத்துங்கள்  - கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகிகள் ...
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில்...