பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகளுக்கு டக்ளஸ் எம்.பியின் முயற்சியால் தீர்வு!
Saturday, July 27th, 2019நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கைக்கு இணங்க 200 ரயில் குறுக்கு பாதைகளில் மின் ஓசை எழுப்புதல் மற்றும் வர்ண சமிஞ்சைகள் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் யாழ் மாவட்ட எம்.பி.டக்ளஸ் தேவானந்தாவினால் நிலையியற் கட்டளை 27 இன் கீழ் 2 இலான வடக்கு ரயில்பாதை விபத்துக்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அங்கேரிய நாட்டின் கடன் நிதி உதவியின் கீழ் எதிர்வரும் 2 வருட காலப்பகுதிக்குள் மின் ஓசை மற்றும் வர்ண சமிஞ்ஞைகளுடன் 200 ரயில் குறுக்கு பாதைகள் முழுமையாக உள்வாங்குவதற்கு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் 1337 ரயில் குறுக்கு பாதைகள் இருப்பதாகவும் இவற்றுள் 185 ரயில் குறுக்கு பாதைகள் தனியார் துறையினால் கையாளப்படுகின்றது.
இதற்கு அமைவாக ரயில் திணைக்களத்தினால் பாதுகாப்பு வழங்கக்கூடிய ரயில் குறுக்கு பாதைகளின் எண்ணிக்கை 1152. இவற்றுள் 608 குறுக்கு பாதைகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் வடக்கு ரயில் பாதைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு சாரதிகள் மற்றும் பொதுமக்களினதும் கவனயீனமே பிரதான காரணமாகும் எனவும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு ரயில் பாதைகளில் இடம்பெறும் விபத்துக்களை தடுப்பதற்காக ரயில் கடவைகளில் பொலிஸாரினால் நபர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வடக்கு ரயில் பாதைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு சாரதிகளினதும் பொதுமக்களினதும் கவனயீனமே பிரதான காரணமாகவுள்ளது.
ரயில்கள் முன்னர்போல் 30,40 கிலோமீற்றர் வேகத்தில் வருவதில்லை. தற்போது 100,110 கிலோமீற்றர் வேகத்தில் வருகின்றன.
நாம் இது தொடர்பில் அறிவித்தல் பலகைகளை வைத்துள்ளோம். இதனை வாகன சாரதிகளும் பொதுமக்களும் கவனத்தில் கொள்வதில்லை என்றார்.
Related posts:
|
|