பேருந்து நிலைய அசௌகரியங்களுக்கு தீர்வுபெற்றுத் தரவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வவுனியா மக்கள் கோரிக்கை!

Saturday, November 24th, 2018

புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதன் பின்னர் பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வருகைதராமையால் மக்கள் நாளாந்தம் பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்துவருவதால் இதற்கான சுமுகமான தீர்வைப்பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வவுனியா மாவட்ட வர்த்தகசங்கப்பிரதிநிதிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இன்றையதினம் வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தின் பல்வேறு பொது அமைப்புகளையும் பொதுமக்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கடந்த 60 வருடங்களாக பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகள் தரித்து நின்று சேவையை மேற்கொண்டுவந்தன. இந்நிலையில் அண்மைய சில காலமாக புதிய பேருந்து நிலையம் நிர்மாணிக்கப்பட்டதிலிருந்து உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு சேவையிலீடுபடும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை. இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

மக்களது அசௌகரியங்களைப் போக்கும் வகையில் எதிர்வரும் காலங்களில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து மீண்டும் புதிய
பேருந்து நிலையத்தில் தரித்து நிற்கும் முகமாக ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறும் குறித்த தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த கோரிக்கையை கருத்திற் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்புக்களுடன் கலந்துரையாடி தீர்வுகளைப் பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

viber image000 viber image5 viber image0000000

Related posts: