பாசையூர் இறங்குதுறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – கடலட்டைப் பண்ணைகளை பார்வையிட்டதுடன், பிரதேச மக்களுடனும் கலந்துரையாடல்!

Wednesday, December 22nd, 2021

பாசையூர் இறங்குதுறைக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளை பார்வையிட்டதுடன், பிரதேச மக்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் புதிதாக கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதகாக  விண்ணப்பித்திருப்பவர்களுக்கான அனுமதிகள் தொடர்பாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் ஆலோசனைகளை வழங்கினார்.

இதேநேரம்

யாழ்ப்பாணம், மணியந்தோட்டத்திற்கும் விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  குறித்த பிரதேச இறங்குதுறை மற்றும் கடலட்டைப் பண்ணைகளைப் பார்வையிட்டதுடன், மணியந்தோட்டம் சனசமூக நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டார்

அத்துடன்

இறுதியாக நடைபெற்ற க.பொ.தராதர பரீட்சைகளில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்ற மணியம் தோட்டத்தினை சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதக்கம் அணிவித்துக் கௌரவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

00

Related posts: