நிலைமாறுகால நீதி நாட்டுக்கு வருமோ தெரியாது ஆனால் நிலைமாறாகால அநீதி எப்போதும் ஓயாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, April 4th, 2019

தேசிய நல்லிணக்கம் என வாய்க்கூசாமல் பேசிக் கொண்டு, வெளிநாடுகளுக்கு காட்சிப்படுத்திக் கொண்டு உள்நாட்டில் இத்தகைய அபகரிப்புகளை மேற்கொண்டு மிகவும் மோசமான முறையில் செயற்படுகின்ற முறைமைகளை மாற்ற வேண்டும். நிலைமாறுகால நீதி இந்த நாட்டுக்கு வருமோ, இல்லையோ, இந்த நிலை மாறா கால அநீதி எப்போதும் ஓயாது போலத்தான் தெரிகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது மக்கள் இடம்பெயர்ந்து பல வருட காலங்கள் மீள்குடியேறாத நிலையில், எமது மக்கள் வாழ்ந்திருந்த காணி, நிலங்களில் மரங்கள், காடுகள், பற்றைகள் வளர்ந்திருந்தால், அவை எல்லாம் வன இலாக்காவுக்கு சொந்தமாகிவிடுமா? எனக் கேட்கின்றேன்.

இன்று மீண்டும்  வில்பத்து தொடர்பில் கதைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதை ஓர் இனத்துக்கு எதிரான செயற்பாடாகக் காட்டப்பட்டும் வருகின்றது. அண்மையில் சுற்றாடல் பிரதி அமைச்சர் அவர்கள் அந்தப் பகுதிக்கு சென்று வந்து, காடழிப்பு அங்கு நடைபெற்றதாக இல்லை எனத் தெரிவித்திருந்தார். அங்கே வில்பத்து வனத்தை அண்டிய பகுதிகளிலிருந்து மக்கள் கடந்த கால யுத்தம் காரணமாக இடம்யெர்ந்திருந்தனர் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அம் மக்களை அம்மக்கள் வாழ்ந்திருந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது என்பது அநீதியான செயல் அல்ல. இன்று, சிங்கராஜ வனப்பகுதி, நக்கிள்ஸ் வனப்பகுதி. ஏன்? இந்த நாடாளுமன்ற சுற்றுவட்டார வனப்பகுதிகள்கூட பட்டப்பகலியே அபகரிக்கப்பட்டு வருகின்றன.

Related posts:

நலிவுற்ற மக்களது வாழ்வியலையும் மேம்படுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா- ஊரெழு மக்கள் சுட்டிக்காட்டு!
வடக்கின் விவசாய பண்ணைகளில் முன்னாள் போராளிகளுக்கு தொழில்வாய்பு வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்த...
இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்துகொடுத்த அமைச்சர் டக்...