பொன்னான வாய்ப்பு தவறவிடப்பட்டது ! இலங்கை- இந்திய ஒப்பந்தம் 30 வருடங்கள் நிறைவு

Saturday, July 29th, 2017

இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இன்றுடன் 30 வருடங்கள் நிறைவு பெறுகின்றது.இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் அரசியல் உரிமை கோரி நடத்திய விடுதலைப் போராட்டத்தின் விளைவாகவே இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது.

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாகவே மாகாணசபை முறைமை இலங்கை மக்களுக்கு கிடைத்தது. மாகாணசபை முறைமையை ஆரம்பமாக ஏற்றுக்கொண்டு “அரசியல் உரிமை” எனும் இறுதி இலக்கு நோக்கி நாம் முன்னேறியிருக்க வேண்டும் என்பதை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம் ஆரம்பத்திலிருந்தே தொடர்ச்சியாக கூறிவருகின்றோம் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். இலங்கை- இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 30 வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

“தீர்வைப் பெற்றுத்தர சர்வதேசம் வரவேண்டும்” என்று ஒவ்வொரு தேர்தல் காலகட்டத்திலும் கூறுகின்றதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்,அதை அவர்கள் ஒரு தேர்தல் கோ~மாகவே கூறிவருகின்றனர். தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியாத தமது இயலாத்தனத்தையும், விருப்பமின்மையையும் மறைப்பதற்காகவே இவ்வாறு தொடர்ந்து கூறி வருகின்றனர். அன்று பாரதப் பிரதமர் ரஜீவ் காந்தி அவர்கள் நேரடியாக முன்வந்து வடக்கையும்,கிழக்கையும் இணைப்புச் செய்து “மாகாண அரசு” எனும் தீர்வைப் பெற்றுத்தந்ததை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியபோது, அதை எதிர்த்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்,மாகாணசபை முறைமையை அரைகுறைத் தீர்வு என்றும்,அதைத் தும்புத் தடியாலும் தொட்டும் பார்க்கமாட்டோம் என்றும் கூறினார்கள்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைத் தவிர அன்றைய காலகட்டத்தில் தளத்தில் நின்றிருந்த தமிழ்த் தலைமைகளுக்கு வடக்கு கிழக்கு இணைந்த, காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடங்கியிருந்த மாகாண அரசை ஆளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை புலிகளின் தலைமை நிராகரித்தது. ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைமை அதைச் சரியாக செயற்படுத்தவில்லை.

தமிழ்மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமையை துரதி~;டவசமாக வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் அனுபவிக்கவில்லை. நாட்டின் ஏனைய பகுதி மக்களே மாகாண அரசொன்றின் பலாபலன்களை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

அன்று மாகாணசபை முறைமையை தமிழ் தலைமைகள் சரியாக பாதுகாத்து முன்னெடுத்திருந்தால்,இந்திய அரசாங்கத்தின் பின்புலமான பேராதரவு எமக்கு கிடைத்திருக்கும், வடக்கு கிழக்கு எனும் எமது தாயகப் பகுதி இணைந்த ஒரு மாகாண அரசாக இருந்திருக்கும், காணி, பொலிஸ் அதிகாரங்களும் மாகாண அரசின் கைகளிலேயே இருந்திருக்கும்.அத்தகைய பொன்னான வாய்ப்பை தமிழ்த் தலைமைகள் தவறவிட்டதால் இந்தியாவின் தார்மீகப் பொறுப்பை தமிழ்மக்கள் இழந்து விட்டார்கள்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் ஆரம்பித்து இலக்கு முன்னோக்கிச்  செல்வதே, தமிழ்மக்கள் அரசியல் அபிலாi~களை வென்றெடுத்து, தமது பூர்வீக மண்ணில்சமத்துவமாக வாழ்வதற்கு தீர்வாக அமையும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

Related posts:

வேலணை திருவள்ளுவர் சனசமூக நிலைய மேம்பாடு தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட சந்திப்பு!
கைகளினால் அள்ளித் தருவதை வாங்குங்கள் - புள்ளடிகளை சிந்தித்து இடுங்கள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...
இரணைமடு குளத்திலிருந்து மீன்குஞ்சுகள் வெளியேறாமல் பாதுகாப்பதற்கான செயற்றிட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவா...