பள்ளிமுனை வான்தோண்டும் கோரிக்கையை நிறைவேற்ற துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Monday, January 15th, 2024

பள்ளிமுனை வான்தோண்டும் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.

மன்னார் பள்ளிக்குடா கடற்றொழிலாளர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் பிரதேச கடற்றொழிலாளர்களுக்கும் கடற்றொழில்  இடையிலான கலந்துரையாடல்  நடைபெற்றது.

இதன்போது, அங்கு வரவேற்புரை நிகழ்த்திய பள்ளிமுனை பங்குத்தந்தை டெனிஸ்,  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கடல் தொழிலாளர் மக்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நன்மைகளை நன்றியுடன் தெரிவித்த அவர் தமது தொழிலாளர்கள் எதிர்தோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்த்து தமது தொழில் முயற்சியினை விஸ்தரிப்பதற்கு  தேவையான கோரிக்கையினையும்  கடற்றொழில் அமைச்சரிடம் முன்வைத்தனர்.

குறிப்பாக பள்ளிமுனை இறங்குதுறை பகுதியை வான்தோண்டி தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை உடனடியாக செய்வதற்கு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி - அமைச்சர் டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்ப...
காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்ட வேலணை சிற்பனை வீதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர...
அதிகாரங்கள் போதியளவில் இன்மையால் மக்கள் தேவைகளை நிறைவு செய்வதில் சவால்கள் காணப்படுகின்றது - அமைச்ச...