பளைப் பகுதியில் தென்னை பயிர்ச் செய்கைச் சபையினால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் அம் மக்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும் !
Friday, November 24th, 2017சிறிமாவோ அம்மையார் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில், 50 ஏக்கர் காணிகளுக்கு மேலதிகமாக காணிகளைக் கொண்டிருந்தவர்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட வகையில், பளை, கரந்தன் பகுதியில் எமது மக்களுக்கு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மூலமாகப் பிரித்து வழங்கப்பட்டிருந்த காணிகள், தென்னை பயிர்ச் செய்கை சபையினால் கையகப்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவித்து அம் மக்கள் பல வருடகாலமாகப் போராடி வருகின்றனர். இந்தக் காணிகள் அம் மக்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும். அந்தவகையில் கௌரவ அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்கள் இவ்விடயம் குறித்து சாதகமான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
அத்துடன் மன்னார் கொண்டச்சி மற்றும் பூநகரி கிராஞ்சி போன்ற பகுதிகளிலுள்ள மர முந்திரிகைக் காணிகள் தற்போது பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படுகின்றதா? என்பதையும் வினவ விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் காணி, நாடாளுமன்ற அலுவல்கள், பெருந்தோட்டக் கைத்தொழில், வலுவாதார மற்றும் வனஜீவராசிகள் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|