பல்வேறு கோரிக்கைகளுடன் வருகைதந்த மக்கள் – முடியுமானரை தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் !

Thursday, June 6th, 2024

யாழ்ப்பாணம் அலுவலகத்திற்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் கோரிக்கைகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்க வருகை தந்திருந்த மக்களை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன்  அவற்றில் பல விடயங்களுக்கு  தீர்வுகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

குறிப்பாக வடபிராந்திய ஜக்கிய தொழிலாளர் சங்கம் நிர்வாகிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.

வடபிராந்திய ஜக்கிய தொழிலாளர் சங்கம் நிர்வாகிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது சங்க கட்டமைப்பிற்குள் யாழ் மாநகர சபையில் நீண்டகாலமாக பணிபுரிந்து நியமனம் கிடைக்காதவர்களுக்கு நியமனம் பெற்று தருமாறும் தமது தொழில் சங்கத்தின் வளர்ச்சி மற்றும் அதன் வேலைத் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் கோரிக்கை முன்வைத்து கலந்துரையாடினர்.

இதேவேளை தென்மராட்சி, படித்த மகளிர் திட்டத்தினை சேர்ந்த கிராமிய மகளிர் அமைப்பினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினர்

படித்த மகளிர் திட்டத்தில் நீண்ட காலமாக வசிக்கின்ற மக்கள் தமது பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க எதிர்பார்த்துள்ள காணியை பிறிதொரு திணைக்களகத்திற்கு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனை தமது பிரதேசத்தின் நலன் கருதி  பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைத்தனர் .

இது தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் உரிய தரப்பினரோடு கலந்துரையாடி இரண்டு வாரத்தில் சுமூகமான தீர்வு பெற்றுத்தரப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

தேசிய நல்லிணக்கத்தை வலியுறுத்துவதோடு எமது மக்களின் தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமைக்காக நாம் தொடர...
கடற்படை - நாரா நிறுவனம் இடையில் ஏற்பட்டுள்ள உரிமைசார் குழப்பங்களை தீர்க்கும் வகையில் நடவடிக்கை!
சட்டவிரோத செயற்பாடுகளில் யார் ஈடுபட்டாலும் அதனை அனுமதிக்க முடியாது - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

‘என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா’ ஊடாக வடக்கு மாகாணத்தில் இதுவரையில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? – நாடாளு...
டக்ளஸ் தேவானந்தாவை நம்பி வாக்களியுங்கள்: தேர்தல் மேடையில் சூசகமாக தெரிவித்த இரா.சம்பந்தன்!
பனை அபிவிருத்தி சபைக்கு இரு புதிய உறுப்பினர்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமனக் கடிதங்கள் ...