நெடுந்தீவு பிரதேசத்தின் கூட்டுறவுச் சங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Monday, June 10th, 2019

நெடுந்தீவு பிரதேசத்தின் கூட்டுறவுச் சங்க வளர்ச்சியை மேம்படுத்தி அதனை சிறப்பாக தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான  நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் குறித்த சங்கத்தின் நிறைவேற்று சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்றையதினம் வருகை தந்திருந்த குறித்த நிறைவேற்று சபை உறுப்பினர்கள் தமது கூட்டுறவு சங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் இடர்பாடுகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் எடுத்துக் கூறியிருந்தனர்.

இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில் –

நீண்ட காலமாக பழதடைந்த நிலையில் இருந்த சமுத்திர தேவா படகு தற்போது சீரமைக்கப்பட்டு முடிவு நிலைக்கு வந்துள்ளது. இதை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு தருவதுடன் அடிக்கடி பழுதடையும் குமுதினி படகை நிரந்தரமாக சீரமைப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன் கூட்டுறவு சங்கம் தற்போது பாரிய நிதி நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதாகவும் குறிப்பாக ஊழியர்களது சேமலாப நிதியை கொடுப்பதில் பெரும் இடர்பாடுகளை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்த அவர்கள் தொழிலாளர்களது சேமலாப நிதியை கொடுப்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டு தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் நெடுந்தீவு பிரதேசத்தின் பிரதான வீதிகள் செப்பனிடப்படாமையால் மக்கள் நாளாந்தம் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதையும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

கூட்டுறவு சங்க நிறைவேற்று சபையினரது கோரிக்கைகளை கவனத்தில் கொண்ட செயலாளர் நாயகம் அவை தொடர்பில் உரிய தரப்பினரது கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை பெற்றுத்தர முயற்சிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அசமந்தப் போக்கினால் சந்தர்ப்பங்கள் தவறவிடப்படுகின்றன - கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்...
ல்அமைச்சர் டக்ளஸ் பிரசன்னத்துடன் வலி வடக்கில் காணிகளை விடுவிப்பதற்கானாள அளவீட்டு பணிகள் ஆரம்பம் !
மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமை - அமைச்சர் தலைமையில் நடைபெற்ற உடுவில் பிரதேச அபிவிருத்திக் கு...

மாற்றம் ஒன்றுக்காக மக்களுக்கு சரியான வழியைக் காட்டுங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் வி...
19 இன் பலவீனங்களே சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட இன்றைய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு மக்களைத் தூண்ட...
கருணை மைந்தன் இயேசு பிரான் அவதரித்த நாளில் தேசமெங்கும் நித்திய ஒளி உண்டாகட்டும் – வாழ்த்துச் செய்திய...