நெடுந்தீவுக்கு புதிய மின்பிறப்பாக்கி – . சாதாரண தரப் பரீட்சை காலத்தில் இணைப்புத் துண்டிப்பும் இடை நிறுத்தம் – அமைச்சர் டக்ளசுடனான சந்திப்பில் துறைசார் அதிகாரிகள் இணக்கம்!
Thursday, May 9th, 2024
…………..
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நிறைவடையும் வரையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்புக்களை துண்டிக்காது
நெகிழ்வுப் போக்குடன் செயற்படுமாறு துறைசார் தரப்பினரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு சாதகமான பதில் கிட்டியுள்ளது.
தற்போது நாடளாவிய ரீதியில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெற்று வருகின்றது.
இதனிடையே, மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்புகளை துண்டிக்கும் செயற்பாடுகளையும் துறைசார் தரப்பினர் முன்னெடுத்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இன்னிலையில் குறித்த பரீட்சைகள் நிறைவடையும் வரையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மின்னிணைப்புகளை துண்டிப்பதில்
நெகிழ்வுப் போக்கை பின்பற்றுவது மாணவர்களின் நலன்களை பாதுகாக்க்கும் ஒரு செயற்பாடாக அமையும் என துறைசார் தரப்பினரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து சம்மந்தப்பட்ட தரப்புக்களினால் குறித்த ஆலிசனை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வடமாகாண மின்சார சபையின் பணிப்பாளர் மற்றும் யாழ் மாவட்ட மின்சார சபையின் பொது முகாமையாளர்களுடன் இன்று மாலை அமைச்சரின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்படி விடயம் கலந்துரையாடப்பட்டடு தீர்மானம் எட்டப்பட்டதுடன் நெடுந்தீவில் ஏற்படும் மின்சார பிரச்சினைக்கு தீர்வினை காண புதிய மின்பிறப்பாக்கி ஒன்றினை உடனடியாக வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|