நீதிமன்றங்களில் போதியளவு தமிழ் மொழி மூலமான நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ்  எம்.பி வலியுறுத்து

Untitled-2 copy Tuesday, November 7th, 2017

உச்ச நீதிமன்றங்கள், மேல் நீதிமன்றங்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் போதியளவு தமிழ் மொழி மூலமான நீதிபதிகளை நியமிப்பதற்கும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செயற்படுகின்ற நீதிமன்றங்களில் மேலதிகமாக நீதிபதிகளை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்

சட்ட மூலங்களை திருத்துவதற்கான இரண்டாம் (2) ஆம் வாசிப்பு நிலை விவாதம் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ் மொழி மூலமான மொழிப் பயன்பாட்டைக் கொண்டவர்களது பல வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு தீர்வாக இந்த நடைமுறை அமையும் என்பது எனது எதிர்பார்ப்பாகும். அன்றி, இனவாத நோக்கம் கொண்டதாக இக் கோரிக்கை தொடர்பில் எவரும் அவதானம் செலுத்தக்கூடாது எனக் கேட்டுக் கொள்வதுடன், அனைத்து நீதிமன்றங்களுக்கும் போதியளவு மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பது குறித்தும் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார்

மேலும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பல்வேறு வழக்குகள் பாரியளவில் குவிந்திருப்பதற்கு ஒரு பிரதான காரணம் சட்டத்தரணிகளின் பற்றாக்குறை என்றும் கூறப்படுகின்றது. எனவே, இவ்விடயம் தொடர்பிலும் உரிய அவதானங்கள் செலுத்தப்பட்டு, போதிய சட்டத்தரணிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


குடாநாட்டில் அதிகரித்துவரும் தொழிலின்மைப் பிரச்சினையே சமூக சீர்கேடுகளுக்கான பிரதான காரணமாக விளங்குகி...
குற்றவாளியை நியாயப்படுத்தும் முதலமைச்சர் விக்கியின் வியாக்கியானம்!
செயலாளர் நாயகத்திற்கும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது...
போராட்டத்துக்கு ஆதரவு தர மறுத்தவர்கள் தமிழின விரோதிகளே - யாழ் பல்கலை மாணவர்கள்!
மக்களின் அபிலாஷைகளுக்கு நிச்சயம் தீர்வுகாண்போம் - ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்தா!