புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது கானல் நீராகவே இருக்கும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, June 20th, 2020

வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் அல்லது உருவாகின்ற வாய்ப்புக்களை பயன்படுத்த வேண்டும். தவறியமையே எமது மககள் இழந்த அத்தனைக்கும் காரணமாக அமைந்தது என்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தல் வீணை சின்னத்தின் 5 ஆம் இலக்கத்தில் போட்டியிடுகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கொண்டலடி ஞானவைரவர் சனசமூக நிலைய முன்றலில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பற்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தும் தவறவிடப்பட்டுள்ளன. குறிப்பாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளை சரியாக செயற்படுத்துவதன் ஊடாக முன்நோக்கி நகர முடியும். அது எமது தற்போதைய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஆனால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டுமாயின் நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவை என்பதுடன் மக்கள் கருத்துக் கணிப்பிலும் வெற்றி பெறவேண்டும்.

எனவே புதிய அரசியலமைப்பு என்பது கானல் நீராகவே அமையுமே தவிர தற்போதைக்கு அது உருவாகுவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் சுட்டிக் காட்டினார்.

Related posts:


குறைபாடுகளுள்ள பாடசாலைகளை இனங்கண்டு அவற்றின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க மு...
கம்பஹா, பௌத்தலோக மாவத்தையில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் கடற்றொழில் அமைச்சர...
கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து - நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் தேவானந்தா!