நாச்சிக்குடா புனித யாகப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 6th, 2020

நாச்சிக்குடா புனித யாகப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கமும் அதனை சூழ வாழும் மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் தேவைப்பாடுகளுக்கும் தீர்வு வெற்றுத்தருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாச்சிக்குடா புனித யாகப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க மக்களுடனான சந்திப்பு இன்றையதினம் குறித்த சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவுத்தார்.

மேலும் –

யுத்தம் நிறைவுக்கு வந்தபின்னர் பல்வேறு பிரச்சினைகளையும் தேவைப்பாடுகளையும் கொண்டிருந்த இந்த பகுதி மக்களுக்கும் இந்தச் சங்கத்திற்கும் பல உதவிகளை நாம் மேற்கொண்டு கொடுத்திருந்தாலும் இன்னமும் இப்பகுதியினதும் தொழிலாளர்களதும் தேவைப்பாடுகளும் பிரச்சினைகளும் முழுமையாக தீர்வுகாணப்படாது தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

அந்தவகையில் இன்றைய இந்த சந்திப்பின் போது சங்கத் தலைவரால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பாக வாடி அமைத்தல், வெளிச்ச வீடு அமைத்தல், வான் தோண்டுதல், சங்கத்திற்குரிய காணிக்கான உரித்தை பெற்றுக்கொள்ளல், மின்சார இணைப்பு, எரிபொருள் நிரப்பு நிலையம் போன்ற அவசியமான கோரிக்கைகளும் இருக்கின்றன்.

இவை ஒவ்வொன்றும் தீர்க்கப்படவேண்டிய விடயங்கள்தான். எளிதாக தீர்வுகணவும் முடியும். கடந்த நல்லாட்சி காலத்தில் இவை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம். ஆனாலும் அன்று நல்லாட்சி என்று கூறிய அரசுக்கு ஆதரவு கொடுத்திருந்த தமிழ் தேசிய கூடமைப்பினர் இவற்றுக்கெல்லாம் தீர்வுகண்டு கொடுக்காதிருந்தது ஏன் என்பதே கேள்விவே இன்று காணப்படுகின்றது.

ஆனாலும் உங்களது வாழ்வாதாரத்துக்கான பொருளாதார ஈட்டலை அதிகரிப்பதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். எமது இந்த முயற்சிகள் மேலும் வெற்றிபெற வரவுள்ள தேர்தலை மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு உங்களது ஆதரவுப்பலம் எமக்கு கிடைக்குமானால் இவ்வாறான பிரச்சினைகள் மட்டுமல்லாது தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அதிகமான பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வை எம்மால் பெற்றுத்தர முடியும்  என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என்றார்.

Related posts:


நினைவேந்தல் நிகழ்வை பொது அமைப்பு நடத்துவதே பொருத்தமாக இருக்கும்- -செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
தோற்றுப்போன இனம் என்ற உணர்வை மாற்றுதற்கு ஒத்துழையுங்கள்: மலையாள புரம் மககள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ...
யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விஷேட கலந்துரையாடல்!