நாச்சிக்குடாவில் கடலட்டைப் பண்ணை – அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் பூர்வாங்க வேலைகள் நிறைவு!
Tuesday, September 21st, 2021நாச்சிக்குடாவில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நிறைந்துள்ளன. இந்நிலையில், அவற்றை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனடிப்படையில் கிளிநொச்சி கடலட்டை செய்கையாளர் சங்கத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ள, புனித யாகப்பர் கடற்றொழிலாளர் சங்கம், அன்னை வேளாங்கன்னி கடற்றொழிலாளர் சங்கம், நாச்சிக்குடா மத்தி கடற்றொழிலாளர் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 61 பயனாளர்களுக்கு தலா ஒரு ஏக்கர் என்ற அடிப்படையில் பண்ணைகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
கடற்றொழில் அமைச்சராக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதவியேற்ற போது, சுமார் 50 கடலட்டைப் பண்ணைகள் மாத்திரமே வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சுமார் 500 இற்கும் மேற்பட்ட கடலட்டைப் பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளமையை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன.
இநிலையில், கடலட்டை பண்ணைகளை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ளுகின்ற திணைக்களங்களின் பிரதானிகளுடன் இன்று மெய்நிகர் வழியூடாக கலந்துரையாடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் தொடர்பாக கேட்டறிந்ததுடன் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|