தேர்தல் வெற்றியை தமிழ் மக்களின் வெற்றியாக்குவோம் – யாழ். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, October 28th, 2019


நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அரசியல் வாதிகள் அல்லாது மக்கள் வெற்றியடைய வேண்டும். அத்தகைய மக்களுக்கான வெற்றியை உருவாக்கித் தரக்கூடியவர் ஜனாதிபதி மஹிந்த ராயபக்ச அவர்களது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவே என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று  நடந்த பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவின் ஆதரவுப் பிரசார  கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுகும் எமக்கும் மிக நெருங்கிய புரிந்துணர்வு நீண்டகாலமாக இருந்து வருகின்றது. இந்த புரிந்துணர்வு தான் கடந்த காலங்களில் நாம் எமது மக்கள் எதிர்கொண்டுவந்த பல பிரச்சினைகளுக்கும் தேவைப்படுகளுக்கும் எம்மால் தீர்வுகளை பெற்ருக்கொடுக்க முடிந்திருந்தது.

நாம் எங்கள் மீதே நம்பிக்கை கொண்டவர்கள். எம்மால் மத்தியில் ஆட்சிக்கு வருபவர்களுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. அதனால்தான் நாம் எம்மை நம்புங்கள். செய்வோம். செய்விப்போம் என்று நம்பிக்கையுடன் உங்களுக்கு தொடர்ச்சியாக கூறிவருகின்றேன்.

கோட்டபாயவின் வெற்றியில் தமிழ் மக்களின் அபிலைசைகளுக்கு தீர்வுகளைக் பெற்றுக்கொடுக்க எம்மால் முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. நான் வாக்கு கேட்டு வருவது எனது வெற்றிக்காக அல்ல. அது உங்கள் ஒவ்வொருவரதும் வெற்றிக்கானதாகவே இருக்கும்.

இதை நான் தேர்தல் கோசமாக கூறவில்லை. எமது மக்களின் ஆழ்மன அபிலாசைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்ற எமது கொள்கை நிலைப்பாட்டை முன்னிறுத்தியே இதைக் கூறுகின்றேன்.

கடந்தன் காலங்களில் நாம் செய்தோம். இனிவருங்காலத்திலும் அதை செய்து காட்டுவேம் என தெரிவித்த செயலாளர் நாயகம் மக்களாகிய உங்களது வெற்றியை உறுதிசெய்ய நீங்கள் இம்முறை பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டபய ராஜபக்‌ஷவின் வெற்றியை உறுதி செய்யுங்கள். அதனூடாக நாம் செய்வோம் செய்விப்போம் என்றார்.

Related posts:

மாற்று வலுவுள்ளவர்களின் வாழ்வியலில் மாற்றங்களை கொண்டுவரும் எமது பணிகள் தொடரும் - டக்ளஸ் தேவானந்தா!
வடக்கின் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விஷேட திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி ...
சர்ப்பம் போல் விழிப்பாகவும் புறாக்களைப்போல கபடமின்றியும் இருங்கள் வெல்வீர்கள் - டக்ளஸ் எம்.பி. தெரிவ...