திருகோணமலை மறை மாவட்ட ஆயரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மரியாதை நிமித்தம் சந்திப்பு!

Saturday, March 27th, 2021

திருகோணமலை மறை மாவட்ட ஆண்டகை நோயல் இமானுவேல் அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் பனைசார் உற்பத்திகளை விருத்தி செய்வதன் மூலம் மக்களுக்கு சிறந்த வாழ்வாதாரத்தினை உருவாக்கவும் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவதற்கு அமைச்சினால் முன்னெடுக்கப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆயர் இதன்போது அமைச்சரிடம் முன்மொழிந்திருந்தார்.

திருமலை மாவட்ட ஆயரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சு மற்றும் கிராமிய எழுச்சி திட்டத்தின் உள்ளூர் கைத்தொழில் துறைகளை மேம்மபடுத்துவதற்கான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியும் எனவும் உறுதியளித்துள்ளார்.

Related posts:

சிறந்த கல்வியியாளர்களை உருவாக்குவதற்கு நாம் தொடர்ந்தும் துணையிருப்போம் - டக்ளஸ் தேவானந்தா!
பனை அபிவிருத்தி சபைக்கு இரு புதிய உறுப்பினர்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமனக் கடிதங்கள் ...
மண்ணெண்ணையை அன்பளிப்பாக வழங்குவதற்கும் சீனா முன்வர வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மு...

திருமலை மாவட்ட கிராம மக்களது நிலைமைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!
மகேஸ்வரன் கொலை: நீதிமன்ற தீர்ப்பு அவமதிக்கப்படுகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு...
அமைச்சர்களான டக்ளஸ் மற்றும் ரமேஸ் பத்திரன பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்...