திருகோணமலைக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

கிழக்கு மாகாணத்துக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொள்ளும் அதேவேளை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயவுள்ளார்.
அத்துடன் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் வெற்றி வாய்ப்பை மக்கள் உறுதி செய்யும் பட்சத்தில் முன்னெடுக்கப்படவுள்ள உட்கட்டுமாணம் உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமை பிரச்சினைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச சபை வேட்பாளர்களையும் சந்தித்து கலந்துரையாடிய டக்ளஸ் தேவானந்தா குறித்த பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தறிந்துகொண்டார்.
Related posts:
|
|