தமிழ் தலைவர்கள் விட்ட தவறுகளே எமது மக்களது இன்றைய நிலைமைகளுக்கு காரணம் – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, January 22nd, 2017

அதிகாரங்கள் கையிலிருக்கும்போதே எமது மக்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தரமான தீர்வுகளை கண்டிருக்கவேண்டும். ஆனால் எமது மக்களை கடந்த காலங்களில் இருந்து இன்றுவரை தேசியம் என்ற போர்வையில் வழிநடத்துபவர்கள் தமது சுயநலன்களுக்காக செய்துவரும் தவறுகளால் இன்றுவரை நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொள்ள முடியாத இனமாக  வாழவேண்டியுள்ளது – என ஈழமக்கள்  ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் எமது தமிழ் மக்களை வழிநடத்திய சேர்.பொன் இராமநாதன் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தந்தை செல்வா அமிர்தலிங்கம் பிரபாகரன் முதற்கொண்டு இன்றுள்ள சம்பந்தன் வரையான அனைத்து தமிழ் தலைவர்களும் தம்மிடம் இருந்த மக்களின் அதிகரித்த அரசியல் அதிகாரங்களைக்கொண்டிருந்தும் தமிழ் மக்கள் எதிர்கொண்டுவந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக வந்த அனைத்து சர்தர்ப்பங்களையும் தமது சுயநலன்களுக்காக தட்டிக்களித்து வந்ததுடன் தமிழ் மக்களையும் பல்வேறு வகையான துன்ப துயரங்களுக்குள் கொண்டுசென்றுள்ளனர்.

அத்துடன் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு மகத்தான வரப்பிரசாதம். அதை கைநழுவவிட்டவர்கள்தான் இந்த தமிழ் தரப்பினர்.  பின்னர் முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாஸா மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்கா ஆகியோர் கொண்டுவந்த சிறந்த தீர்வுகளையெல்லாம் தட்டிக்களித்துவிட்டு இன்று பல்லாயிரம் உயிர்களையும் உடமைகளையும் பறிகொடுத்தபின்னர் மீண்டும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியாகிய நாம் 1987 களிலிருந்து வலியுறுத்திவரும் 13 ஆவது தீர்வுத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைககு  வந்துள்ளனர்.

இவர்களது வெட்டிப்பேச்சுக்கள்தான் அன்றுதொட்டு இன்றுவரை தமிழ் மக்களது உணர்வுகளை  தூண்டிவிட்டு அழித்துக்கொண்டிருக்கின்றது என்ற உண்மை நிலையை மக்கள் இன்று உணர்ந்துள்ளதால் இனிவருங்காலத்தில் ஒரு மாறுபட்ட அரசியல் தேடலை மக்கள் உருவாக்கவுள்ளனர். அந்த தெரிவு எமது கரங்களுக்கானதாக அமையப்பெற்றால் நாம் நிச்சயம் இதுவரைகாலமும்  தமிழ் மக்கள் வடித்துக்கொண்டிருக்கும் நீடித்த கண்ணீருக்கு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தர தயாராகவுள்ளோம் என்றார்.

இச்சந்திப்பின்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) மற்றும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிரவாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் (ரங்கன்) ஆகியோர் உடனிருந்தனர்.

DSCF0111

Related posts:


உள்ளூராட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்தார் டக்ளஸ் தேவானந்தா! (விஞ்ஞாபனம் இணைப்பு)
மாகாண சபைகளின் அதிகாரங்களை வலுவிழக்கச் செய்யும் எதுவித முயற்சிகளையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளவி...
யாழ்ப்பாணத்தில் படகு கட்டும் தொழிற்சாலையை அமைதற்கு தனியார் முதலீட்டாளர்கள் கோரிக்கை - ஒத்துழைப்பு வ...