சுய பொருளாதாத்தைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் முழுமையாக அக்கறை செலுத்தி வருகின்றது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளின் தாக்கம் இன்னும் சில வருடங்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கப் போகின்றது. இந்தச் சவாலுக்கு உலக நாடுகள் அனைத்துமே முகங்கொடுக்க வேண்டியுள்ளது என தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதிலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் எமது சுய பொருளாதாத்தைக் கட்டியெழுப்புவதிலேயே முழுமையாக அக்கறை செலுத்தி வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சமகால நெருக்கடி தொடர்பாக உங்களின் கருத்து என்ன? என பிரபல வார இதழ் ஒன்றின் நேர்காணலின்போது ஊடகவியலாளரால் எழுப்பப்ட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கரத்து தெரிவிக்கையில் –
தற்போது கொரோனா தொற்றால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமை எமது நாட்டிற்கான நெருக்கடியாக மாத்திரமல்லாமல் உலகுக்கான நெருக்கடியாக உருவெடுத்திருப்பது உண்மையிலேயே துரதிஸ்டமானது. அதற்காக ஓடி ஒளிய முடியாது. நம்பிக்கையுடன் அறிவுசார்ந்து சிந்தித்தது அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும் .
அந்தவகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் செயற்பாடட்டுக் கொண்டிருக்கின்ற தற்போதைய அரசாங்கம் சிறப்பான முறையில் விடயங்களை அணுகி வருகின்றது. நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் சுகாதாரத் தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேவையற்ற நடமாட்டங்களை தவிர்த்து, அரசாங்கத்தினால் வெளியிடப்படுகின்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய ஒத்துiழிப்பினை வழங்குவார்களாயின், தற்போதைய கொரோனா அச்சுறுத்தலில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.
இருந்தாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளின் தாக்கம் இன்னும் சில வருடங்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கப் போகின்றது. இந்தச் சவாலுக்கு உலக நாடுகள் அனைத்துமே முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
எனவே, எமது சுய பொருளாதாத்தினை கட்டியெழுப்புவதில் எம்முடைய அரசாங்கம் அக்கறை செலுத்தி வருகின்றது. சுய பொருளாதாரம் என்கின்றபோது, இலங்கையைப் பொறுத்தவரையில் விவசாயமும் கடற்றொழிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அந்தவகையில், கடற்றொழில் அமைச்சர் என்ற அடிப்படையில், கொரோனா காலப் பகுதியில் கடற்றொழிலாளர்கள் சுகாதார நடைமுறைகளைப் பேணி தொழில் நடைவடிக்கைகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|