சுத்திகரித்த குடிநீரை சாவகச்சேரி மக்களுக்கு வழங்குவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Tuesday, June 20th, 2023


……….
சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள நல்ல தண்ணீர் கிணற்றை சுத்திகரித்து பிரதேச மக்களுக்கும் பயணிகளுக்கும் குடிநீர் வழங்குவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

குறித்த கிணறு சோழர்களினால் அமைக்கப்பட்ட சிவன் கோயிலின் மூலஸ்தானத்திற்கான தீர்த்தக் கிணறு என்பது ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டமையினால் தொல்லியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  அமைச்சருடனான சந்திப்பின் போது, குறித்த கிணற்றின் கட்டுமானங்களில் பாதிப்பை ஏற்படுத்தாமல் மக்களுக்கான குடிநீரை வழங்குவதற்கு தொல்லியல் திணைக்களத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்(யாழ்ப்பாணம்) திரு. பந்துல ஜீவ, புனர்நிர்மாணப் பொறுப்பதிகாரி திருமதி ராஹினி மற்றும் மேலாய்வு உத்தியோகஸ்தர் திரு. தஷிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். – 20.06.2023
000

Related posts:

இரத்தப் பலிகளை சுமந்து நடந்த மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றுவோம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்த...
எமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் - பளை நகரப் பகுதி வர்த்தகர்கள் டக்ளஸ் எம்.பி.யிடம் கோ...
உடற்கல்வி ஆசிரியர்களின் இடமாற்றம் காலவரையறை இடப்பட்டே வாழங்கப்படும்- அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!