சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய பேருவளை துறைமுகத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்பு!

பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய பேருவளை துறைமுகத்தின் சுகாதார செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணித்துள்ளார்.
தற்போது நாட்டை அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த்தொற்று தெர்டபான விழிப்புணர்வுகளை அரசு பல வழிகளிலும் முன்னெடுத்து வருகின்ற நிலையில் பேருவளை துறைமுகத்தின் சுகாதார செயற்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளில் கடற்றொழிலாளர் சமூகம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரிகளிடையே காணப்பட்ட சுமுகமற்ற நிலைமைகளால் பல குழப்பநிலைகள் இங்கு காணப்பட்டன.
இந்நிலையில் இது தொடர்பில் நேற்றையதினம் நேரில் சென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்தறிந்துகொண்டார்.
இருதரப்பினரது முன்வைத்த பிரச்சினைகளையும் கருத்துக்களையும் ஆராய்ந்து தற்போதைய நாட்டின் நிலைமைகளை கருத்தில் கொண்டு குறித்த இரு தரப்பினரது ஆலோசனைகளுக்கும் அமைய துறைமுகத்தின் சுகாதார செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அதை துறைமுக நிர்வாகம் கடற்றொழிலாளர் சமூகம் ஏற்று நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|