சுகாதார தொண்டர் நியமன இழுபறி நிலைக்கு நியாயமான தீர்வு வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 22nd, 2019

சுகாதார தொண்டர் நியமனம் தொடர்பான இழுபறி நிலைமைக்கு விரைவில் நியாயமான முறையில் அவர்களது சேவை மூப்பு மற்றும் தராதரங்கள் கருத்தில்கொள்ளப்பட்டு வேற்றுமைகள் இல்லாது முன்னுரிமை அடிப்படையில் படிப்படியாக நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடல்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் குறித்த பிரச்சினை தொடர்பில் மன்னார் மாவட்டத்தின் ஒருதொகுதி பாதிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனரஇதன்போதே அவர் இவ்வாறு தெவித்தார்.

மேலும் –

இது குறித்த ஒரு மாவடத்திற்குரிய விடயமல்ல. வடமாகாணத்தின் பிரச்சினை.

அத்துடன் சுகாதார சிற்றூழியர் நிரந்தர நியமனங்களின் குழறுபடிகள் காரணமாக நீண்டகாலமாக நிரந்தர நியமனத்தில் இழுபறி நிலை காணப்படுகிறது.

இன்னிலையில் குறித்த பணியை மேற்கொள்ளும் தொண்டர்கள் பல்வேறு துன்ப துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறித்த தொண்டர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் மற்றும் நிலைமைகளை அவதானத்தில் கொண்டு அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக புதிய ஆளுநருடன் பேச்சுக்களை மேற்கொண்டு இது தொடர்பான இழுபறி நிலைக்கு நிரந்தர தீர்வைக்காண முயற்சிகள் எடுக்கவுள்ளேன்.

அத்துடன் நீண்டகாலமாக பதிக்கப்பட்ட மற்றும் சேவை புரியும் சுகாதார தொண்டர்களுக்கு அவர்களது சேவை மூப்பின் பிரகாரம் முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கான நிரந்தர நியமனங்களுக்கு தீர்வுகாண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Related posts: