சம்பூர் மின் உற்பத்தி நிலையம் இணக்க அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்? – ஈ. பி. டி. பி.

Monday, April 11th, 2016

திருகோணமலை, சம்பூர் பகுதியில் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பில் பல்வேறு எதிரப்புகள் கிளம்பியிருக்கும் நிலையில், இந்த அரசைக் கொண்டு வந்தவர்கள் தாங்களே என மார்தட்டிக் கொண்டு, இந்த அரசுடன் இணக்க அரசியல் நடத்தி, பதவிகளை – பொறுப்புகளைப் பெற்றுக் கொண்டுள்ள தமிழ்த் தலைமைகளின் நிலைப்பாடு என்ன? என்பதை அவர்கள் பகிரங்கமாகத் தெரிவிக்க முன்வரவேண்டும்.

இந்த அரசுடன் இணக்க அரசியல் நடத்திவரும் இத் தலைமைகள் பொதுவாகவே எமது மக்களின் பிரச்சினைகளைத் தட்டிக் கழித்துவரும் நிலையில், சம்பூர் மின் உற்பத்தி நிலைய விவகாரமானது தற்போது பெரும் மக்கள் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் அது அப்பகுதியின் சூழலுக்கு பெரும் ஆபத்தாக இருக்குமென பல தரப்பினரும் சுட்டிக்காட்டுகின்றனர். அதே நேரம் இத் திட்டம் நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியக் கூறுகளே காணப்படுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

இந்த நிலையில், அப்பகுதியல் வாழ்ந்து வருகின்ற எமது மக்களின் நலன்களை நாம் அவதானத்தில் கொண்டே செயற்பட வேண்டும். அந்த வகையில் இந்திய அரசுடன் கலந்துரையாடி இத் திட்டங்களில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றே நாம் கருதுகின்றோம். எமது மக்களின் நலன்கள் தொடர்பில் பாரிய அக்கறையுடன் செயற்பட்டுவரும் இந்திய அரசு, இந்த விடயத்திலும் சில விட்டுக் கொடுப்புக்களை செய்ய முன்வரலாம்.

எனவே, இதற்கு இன்றைய அரசுடன் இணக்க அரசியல் நடத்திவரும் தமிழ்த் தலைமைகள் தயாரா? இல்லையேல், இந்தப் பிரச்சினையையும் எமது மக்களின் ஏனைய பிரச்சினைகள் போல் கைகழுவி விடப் போகிறார்களா?

எமது மக்களின் வாக்குகள் மட்டும்தான் தமக்குத் தேவை. எமது மக்களின் பிரச்சினைகள் தமக்குத் தேவையில்லை என்று கருதி செயற்பட்டுவரும் இத் தலைமைகள், இந்த விடயம் தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவிக்க முன்வர வேண்டும்.

Related posts:

சமூகத்தின் நற் பிரையைகளை வளர்க்கும் களமாக விழங்குவது சனசமூக நிலையங்கள்  – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
புகையிரத சேவையில் பாரிய சுகாதாரச் சீர்கேடுகள்: தமிழ் மொழியும் புறக்கணிப்பு – நாடாளுமன்றில் டக்ளஸ் எம...
கடல்சார் அனர்த்த முகாமைத்துவ நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

மத அடையாளங்களை பிற மதம் சார்ந்த மக்களிடம் திணிப்பதை தவிர்ப்பதே ஆரோக்கியமானது – டக்ளஸ் எம்.பி. தெரிவி...
ஊரடங்கு தளர்வு நேரங்களில் சனநெருக்கடிகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்: மாற்று வழிமுறை குறித்து ஜனா...
யாழ் குடாநாட்டின் முக்கிய பொதுச் சந்தைகளின் வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர...