கூட்டமைப்பினரின் போலி வேஷங்களை மக்கள் அடையாளங் கண்டுகொண்டமையின் வெளிப்பாடே கனேடிய தமிழ் மக்களின் உணர்வுகள் வெளிப்படுத்துகின்றன – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Sunday, November 21st, 2021

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் போலி வேஷங்களை மக்கள் அடையாளங் கண்டு வருகின்றமையை நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியனுக்கு எதிரான கனேடிய புலம்பெயர் தமிழ் மக்களின் உணர்வுகள் வெளிப்படுத்துகின்றன என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கூறித் திரிபவர்கள் தொடர்பில் தற்போது மக்களிடம் தெளிவு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் எதுவும் தமக்கிருக்கும் சிறப்பரிமையை பயன்படுத்துி கதைக்கலாம். ஆனால் வெளியில் அதை கதைக்கும் போது மக்களிடையே அதற்கு எதிரான கருத்தே அதிகம் இருக்கின்றது. அந்தவகையில் சுயலாப அரசியல் செய்பவர்களுக்கு இது ஒரு அனுபவ பாடமாக அமைந்துள்ளது.

இதேநேரம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பதிவு செய்பப்பட்டதிலிருந்து ஒரே நிலைப்பாட்டுடன் தான் செயற்பட்டு வருகின்றது.

ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வு தான் சாத்தியம் என்றும் தேசிய அரசியலூடாக, நாடாளுமன்ற ஜனநாயகத்தினூடாக தேசி நல்லிணக்கத்தினூடாகவே எமது பிரச்சினைக்க தீர்வை காணமடியும் என்று வலியுறுத்தி வந்துள்ளோம்.

அதனடிப்படையில் 1987 களில் உருவாக்கப்பட்ட 13 ஆவது சீர்திருத்தம் தான் எமது பிரச்சினைகளுக்கு தீர்வை தருவதற்கான சிறந்த ஆரம்பம் என நாம் கூறியிருந்தோம். அதை தொடர்ந்தும் வலியுறுத்தியும் வருகின்றோம். .எமது இந்த தூரநோக்கள்ள விடயத்தை அன்று எல்லாரும் எதிர்த்தார்கள். ஆனால் இன்று அத்தனையையும் இழந்தபின்னர் அதுதான் சிறந்ததென ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

நாம் கூறியபோது ஏற்றுக்கொண்டிருந்தால் தமிழ் மக்கள் இத்தனை அழிவுகளையும் அவலங்களையும் சந்திக்க நேர்ந்திருக்காது என்றும் சுட்டிக்காட்டியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் போலி வேஷங்களை மக்கள் அடையாளங் கண்டு வருகின்றமையை நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியனுக்கு எதிரான கனேடிய புலம்பெயர் தமிழ் மக்களின் உணர்வுகள் தற்போது வெளிப்படுத்தி உள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

குறிக்காட்டுவான் - நயினாதீவுக்கு  இடையில்  பாலம் அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும் !
குண்டு வெடிப்புக்கள் கண்டனத்திற்குரியவை : மக்கள் பாதுகாப்பாகவும் விழிப்புனர்வுடனும் இருக்க வேண்டும் ...
வடமராட்சி பகுதி கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துவானந்தா களஆராய்வு!

தண்ணீர் பவுஸர்களுக்கும், பால் பௌஸர்களுக்கும்  இறக்குமதி வரிச்சலுகை கொடுக்க வேண்டும் - நாடாளுமன்றில் ...
தனக்கென ஒரு அரசியல் சித்தாந்தம் கொண்ட டக்ளஸ் - சட்டத்துறை வல்லுநர் பேராசிரியர் கண்ணமுத்து சிதம்பரநாத...
அழிந்த வாழைகழுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு ஜ...