கல்விச் செயற்பாடுகளில் ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் அவசியம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!       

Tuesday, May 23rd, 2017

  

எமது நாட்டின் கல்வித்துறையானது கல்வி அமைச்சின் கீழ் தேசிய கல்வி நிறுவகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பரீட்சைகள் திணைக்களம் என்பன செயற்பட்டு வருகின்ற போதிலும் இவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் தொடர்பில் பாரிய குறைபாடுகளை காணக் கூடியதாக உள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மூன்று முக்கிய துறைகளும் ஒன்றிணைந்த செயற்பாடுகளை மேற்கொள்வது அரிதாகி, தனித்தனி பிரிவுகளாக செயற்படுகின்றதான ஒரு தோற்றப்பாடே நடைமுறையில் தெரிய வருவதால், இது தொடர்பில் கல்வி அமைச்சர்  தனது அவதானத்தைச் செலுத்தி, இம் மூன்று துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக் கட்டமைப்பினை வலுவானதாகக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா நாட்டில் தேசிய மொழிக் கொள்கையை முறையாக அமுல்படுத்த வேண்டியதன் முக்கியப் பங்கு கல்வி அமைச்சுக்கும் உரியது என்றும் இதனைப் புறக்கணிக்கும் போக்கிலிருந்து மீண்டு, தேசிய மொழிக் கொள்கையைப் பூரணமாக அமுல்படுத்தக்கூடிய வகையில் கல்வி அமைச்சு செயற்பட வேண்டும்  வலியுறுத்தியுள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் 2015ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் இறுதிக் கிரியைகள் தமிழர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நடைபெறவேண்டு...
முற்போக்கு சிந்தனையோடு அனைவரையும் அரவணைத்து செயற்பட்டவர் அமரர் ரேணுகா ஹேரத் - டக்ளஸ எம்.பி. தெரிவிப்...
பொருளாதார நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்ளும் நோக்கில் சாதகமான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பா...