கல்மடுநகர் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 16th, 2021

கிளிநொச்சி கல்மடுநகரில் பலம் புனரைப்புச் செய்வதற்கான  பணியை கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அடிக்கல்லை நாட்டி ஆரம்பித்துவைத்தார்.

கல்மடுநகர் பாலத்தை கட்டித்தருமாறு  கல்மடுநகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் கல்மடுநகர் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இன்று(16.03.2021) குறித்த பாலத்தைக் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டி பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை் பணிப்பாளர் திரு. குரூஸ் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

இதனால் இதுவரை நீண்டதூர சுற்றுப்பயணங்களை செய்து கஷ்டப்பட்ட விவசாயிகளும், பள்ளிச் சிறுவர்களும் பொதுமக்களும் பயனடையவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

மாகாணசபையின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையீடு செய்வதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை - நாடாளுமன்றத்தில் டக...
இரணைதீவில் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்திற்கு எதிர்வரும் திங்களுக்குள் தீர்வு - அமைச்சர் டக்ள...
அறம் சார்ந்து அரசியல் சமூக நீதிக்காக உழைத்த அமரர் தெணியானுக்கு அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!

நவீன வசதிகளுடன் கூடைப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் - டக்ளஸ் தேவானந்தா...
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளால் நாளாந்தம் விபத்துக்கள் அதிகரித்தே வருகின்றன – டக்ளஸ் எம்.பி சுட்டி...
மீள்குடியேற்றத்தினை விரைவுபடுத்த தீர்மானம் - அமைச்சர் டக்ளஸின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம்!