கறுப்பு ஜுலையின் காயங்கள் மக்களிடையே இன்னமும் மாறவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, July 23rd, 2019

இந்த நாட்டிலே கறுப்பு ஜூலை ஆரம்பித்து வைக்கப்பட்ட இன்றைய தினத்திலே, அதன் வேதனைகள் இன்னமும் மறையாதிருக்கின்ற நிலையில் மறக்காதிருக்கின்ற நிலையில் இந்த வருடம் மீள அதனை நினைவுபடுத்தும் வகையில் யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதியிலே இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாக்கப்பட்டுள்ள நிலையிலேயே நான் இந்த விவாதத்தில் கலந்து கொண்டிருக்கின்றேன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற  நிர்வாக மாவட்டங்கள் சட்டத்தின் கீழான தீர்மானங்கள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இனங்களிடையேயும் மதங்களிடையேயும் முரண்பாடுகளையும் கசப்புணர்வுகளையும் வளர்த்தெடுக்கின்ற ஓர் அபாயம் மிகவும் சுதந்திரமாகவே நாட்டுக்குள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற இந்த கால கட்டத்தில் ஆட்சி நிர்வாகமானது கைகளைக் கட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்ற ஒரு நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் கவலை தருகின்ற விடயமாக உள்ளது.

நாட்டுக்குள் ஒரு பக்கம் வறட்சி ஒரு பக்கம் மழை வெள்ளம் ஒரு பக்கம் கடும் காற்று எனப் பார்த்தால் ஆட்சிக்குள் எல்லாப் பக்கங்களிலும் வறட்சி நிலையே காணப்படுகின்றது.

இந்த துறைமுக நகரமும் இலங்கை வரைபடத்தில் இணைக்கப்பட்டு உருவாகின்ற இலங்கை வரைபடமானது கையை விரித்த மாதிரி இருக்குமென்று கூறப்படுகின்றது. உண்மையில் அது இந்த நாட்டின் தற்போதைய நிலைமைக்குப் பொருந்தும் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

Related posts:


கிளிநொச்சி நன்னீர் மீன் குஞ்சு உற்பத்திக்கான தொட்டிகளை புனரமைப்பது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் ...
பளையில் எல்.எல்.ஆர்.சி. காணிகளை இராணுவத்திற்கு வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுவதான செய்திகளில் உண்மையி...
இந்திய தனியார் முதலீட்டாளர் பங்களிப்பு - கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்களை அமைப்பது தொடர்பில் அம...