கட்சியினால் மேற்கொள்ப்படுகின்ற வேலைத் திட்டங்கள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்படுவதில்லை – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Saturday, November 20th, 2021

கட்சியினால் மேற்கொள்ப்படுகின்ற வேலைத் திட்டங்கள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்படுவதில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தனது சிந்தனைகள்  , எண்ணங்கள்  எல்லாம் மக்களின்  வாழ்வில் ஒரு சுபிட்சமான, நிம்மதியான  வாழ்வை ஏற்படுத்தி கொடுத்து விடவேண்டும் என்ற அதங்கமே என்றும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக்  கட்சியின் செயற்பாடுகளை விஸ்தரித்தல் மற்றும் மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை அடையாளங் கண்டு அவற்றினை தீர்ப்பதற்கான பொறிமுறைகள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட நிர்வாக உறுப்பினர்களுடன்  கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடத்திய விசேட கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களைப் போன்று, தேர்தல் காலங்களில் மக்கள்  தொடர்ந்தும் தவறான தீர்மானங்களையே எடுக்கின்றனர் . ஆகவே இங்கே மக்கள் தவறான தீர்மானங்களுக்கு கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் கட்சியினால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை கட்சி மயப்படுத்தல்கள் ஆக்கப்பட மக்களிடம் சொல்லவில்லை என்பதுவே எனது நிலைப்பாடு. எனவே மாற்றத்தை உருவாக்க வேண்டுமெனில் இவ்வாறான செயற்பாடுகளை  தொடர்ந்து நீடித்து செல்ல முடியாது

000

Related posts:

யாழ் நகர சிற்றங்காடி வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று...
நிறுத்தப்பட்டது உருளைக்கிழங்கு மானியம் - அரசின் திட்டங்களை உதாசீனம் செய்ய அனுமதிக்க முடியாது - அமை...
விடயங்கள் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் பத்திரிகையில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. - அமைச்சர் டக்...