யாழ் நகர சிற்றங்காடி வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!

Wednesday, February 7th, 2018

யாழ்.நகர மத்திய பகுதியில் அமைந்துள்ள சிற்றங்காடி பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சென்று அப்பகுதி வியாபாரிகளது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

இன்று காலை குறித்த பகுதிக்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அப்பகுதியில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளார்.

குறிப்பாக முனீஸ்வன் வீதியிலிருந்த கடைத்தொகுதிகள் யாவும் தற்போது நகரின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிற்றங்காடி பகுதிக்கு மாற்றப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்போது இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் வியாபார நடவடிக்கைகளில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் சிற்றங்காடி வர்த்தகர்கள் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்

அத்துடன் குறித்த கடைத் தொகுதிகள் கட்டித்தரப்பட்டிருந்தாலும் கூட தமது கோரிக்கைகளை குறித்து அங்காடிப் பகுதியை நிர்மாணித்தவர்கள் கவனத்தில் கொள்ளாது தம்மை புறந்தள்ளியிருந்ததாகவும் இதனால் தாம் மிகுந்த மனவிரக்தியுடனேயே தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

27901886_1667765773262503_1053926200_o

Related posts:

வடக்கில் பாலுற்பத்தியை மேம்படுத்த முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். - நாடாளுமன்றில் டக்ளஸ் த...
சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்க...
அசமந்தப் போக்கினால் சந்தர்ப்பங்கள் தவறவிடப்படுகின்றன - கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்...