ஏமாற்றத்தின் வெளிப்பாட்டை மக்களிடம் காணமுடிகின்றது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 31st, 2018

உள்ளூராட்சி மன்ற தேர்தலை மட்டுமல்லாது வடக்கு மாகாண சபை தேர்தலையும் வெற்றிகொண்டு எமது மக்களுக்கு பணியாற்றவே நாம் விரும்புகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற கட்சியின் தொகுதி செயற்பாட்டாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நாம் எந்த சந்தர்ப்பங்களிலும் சவால்களையும் நெருக்கடிகளையும் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாது ஒவ்வொரு காலகட்டங்களிலும் எதிர்கொண்டுவருகின்றோம்.

இருந்தும் இந்தத் தேர்தல் காலங்களில் என் மீதும் எமது கட்சி மீதும் அவதூறானதும் பொய்த்தனமானதுமான பிரசாரங்களை திட்டமிட்ட வகையில் சக தமிழ்க் கட்சிகள் முன்னெடுத்துவருகின்றார்கள்.

இந்த நிலையில் இவ்வாறான அவதூறுகளையும் நெருக்கடிகளையும் கண்டு நாம் துவண்டுபோகாது மக்களின் நலன்களை முன்னிறுத்தியவாறு எமது செயற்றிட்டங்களுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் உழைப்பதற்கு இவ்வாறான இடர்பாடுகளையும் சவால்களையும் துணிச்சலுடன் எதிர்கொள்வோம்.

இவ்வாறான நெருக்கடிகளினூடாக கிடைக்கப்பெறும் வெற்றிகளினூடாகவே மக்களுக்கான பணிகளை நாம் சிறப்புடன் முன்னெடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா மக்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தையும் மக்களுக்கு தெளிவுபடுத்துமாறும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் நாம் பங்கெடுக்கும் சந்திப்புக்களில் மக்கள் பெருமளவில் திரண்டுவந்து எமக்கு ஆதரவை தருகின்றமையானது எமக்கு அவர்கள் மீது நம்பிக்கையையும் எதிர்பார்ப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளதுடன் ஒரு மாற்றுத் தலைமையினுடைய தேவையையும் உணர்த்தியுள்ளதையும் உணர முடிகின்றது.

Related posts:


35 அடிக்கு மேற்பட்ட நீளமான மீன்பிடி படகுகளுக்கு அரச மானியம் வழங்க நடவடிக்கை - டக்ளஸ் தேவானந்தா ஏற்பா...
வவுனியா கரப்பக்குத்தி வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா? – நாட...
ஒரு கறுப்பு அத்தியாயத்தை எழுதிய ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு – இறந்தவர்களை நினைவு...