இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளைக் கேட்பது என்பது எமது இன உரிமையை அடகு வைப்பதல்ல – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, November 28th, 2017

ரசாங்கத்திடம் எமது இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளைக் கேட்பது என்பது எமது இன உரிமையை அடகு வைப்பதல்ல. அரசாங்கத்திடம் எமது இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாயப்புகளைக் கேட்டுப் பெறுவதானது எமது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், தற்போது 40 ஆயிரத்து 493 இளைஞர்கள் தொழில்வாய்ப்புகளுக்கான பதிவுகளை மாவட்டச் செயலகங்களில் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. பதிவு செய்யப்பாடாத நிலையிலும் இன்னும் பலர் இருக்கின்றனர்.

அந்தவகையில் எமது இளைஞர், யுவதிகள் அரசாங்கத் தொழில்வாய்ப்புகளில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகின்றனர். தொழில்வாய்ப்புகளுக்காக எமது இளைஞர்கள், யுவதிகள் போராடி வருகின்ற நிலையில், தமிழ் மொழியில் பரிச்சயமே அற்ற தென் பகுதி சார்ந்த பலருக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நியமனங்கள் வழங்கப்பட்டு. எமது மக்களும் அசௌகரியங்களுக்கு உட்பட்டு, அவ்வாறு நியமனங்களைப் பெற்று வருபவர்களும் அசௌகரியங்களுக்கு உட்பட்டு, அரசப் பணிகள் நகராமல் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலைமைகளே அதிகமாகக் காணப்படுகின்றன.

Untitled-1 copy

Related posts: