எவ்வாறானதொரு சூழ்நிலையாயினும், அதனை மக்களின் நலன்களிலிருந்து எதிர்கொள்வோம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 9th, 2018

அரசியல் உரிமை, அபிவிருத்தி, அன்றாடப் பிரச்சினைக்கான தீர்வு என்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொள்கைகள் வலுப்பெறும் இச்சூழலில் எம்மை நோக்கி அணிதிரண்டு கொண்டிருக்கும் மக்களின் எழுச்சி, அரசியல் ரீதியானதொரு பயத்தை எம்மை நோக்கி சேறடிப்பவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நேற்றையதினம் இடம்பெற்ற இலண்டன் பிராந்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் மத்தியில் காணொளி ஊடாக உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –

எமது மக்களுக்காக தியாகங்களுடன் கூடிய சேவையை அயராது செய்துவரும் எம்மை, எமது மக்களின் செயற்பாடுகளைச் செய்ய விடாது, இடைக்காலத் தடைகளையும், அரசியல் ரீதியான முட்டுக்கட்டைகளையும் எம்மை நோக்கிப் பிரயோகிப்பவர்கள் ஒன்றை மாத்திரம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி எவ்வாறானதொரு சூழ்நிலையாயினும், எமது மக்களின் நலனில் நின்று, அதை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கும் என்பதுடன், கிடைக்கின்ற ஒரு நிமிடமாயினும், எமது மக்களுக்கான பணி செய்து கிடப்பதே எமது கட்சியினதும், எனதும் ஆவல் என்று குறிப்பிட்டார்.

2

6

Related posts:

புதிய நவீன அடையாள அட்டை மும்மொழிகளும் இருக்கவேண்டும். நாடாளுமன்றத்தில்டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கை...
கருவாடு உற்பத்திகளை உள்நாட்டில் அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்துவது தொடர்பி...
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க சமயோசிதமான அணுகுமுறைகளே அவசியம் - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!